தமிழ் – தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள்: செய்தன, செய்யவேண்டியன

- 23%

0
Certificate

Paid

Language

Level

Intermediate

Last updated on February 19, 2025 7:40 am
Add your review

What you’ll learn

  • தமிழ் – தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள் : செய்தன, செய்யவேண்டியன எனும் இப்பாடம் இருமொழி இலக்கண ஆய்வுகளை அறிமுகம் செய்கின்றது.
  • தெலுங்கு இலக்கண வரலாற்றை மிகச் சுருக்கமாக அறிமுகம் செய்கின்றது.
  • தமிழ், தெலுங்கு இலக்கணப் பனுவல்களை ஒப்பீடு செய்த ஆய்வுகளை அறிமுகம் செய்கின்றது.
  • எதிர்கால இலக்கண ஒப்பாய்வுக் கருதுகோள்களை முன்வைக்கின்றது.
  • இலக்கணங்களுடன் சோதிடத்தை ஒப்பிட்டு செய்யும் ஆய்வுக் கருதுகோளை இறுதியில் முன்வைக்கின்றது.

முனைவர் சி.சாவித்ரி அவர்கள் தமிழ் – தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள் : செய்தன, செய்யவேண்டியன எனும் பாடப்பொருளின் ஆசானாக அமைகின்றார். இவர், உதவிப்பேராசிரியர், இந்திய மொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியாவில் பணியாற்றி வருகின்றார்.

இவர் பன்னாட்டளவில் பல்வேறு ஆய்வுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியவர்.

தெலுங்கில் பாண்டித்துவம் பெற்றவர்.

தெலுங்கு மொழி இலக்கணங்களான ஆந்திர சப்த சிந்தாமணி (கி.பி.11), பாலவியாகரணம் (கி.பி. 1858) தமிழில் மொழியாக்கம் செய்தவர்.

தமிழ் – தெலுங்கு ஒப்பாய்வுகளில் கவனம் செலுத்தி வருபவர்.

இப்பாடத்தை வெளியிடுவதற்கு அனுமதி நல்கிய பேராசிரியருக்கு நன்றி.

Dr. Ch. Savithri is the teacher of the Tamil-Telugu Grammar Comparisons: Do’s and Don’ts. He is an Assistant Professor, School of Indian Languages ​​and Comparative School, Tamil University, Thanjavur, Tamil Nadu, India.

He has authored various dissertations and dissertations internationally.

Scholar in Telugu.

Translated Telugu grammars Andhra Sabtha Chintamani (AD 11) and Balaviyakaranam (AD 1858) into Tamil.

Focusing on Tamil-Telugu comparisons.

Thanks to the professor for giving me permission to publish this course.

தமிழ் மொழி ‘இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,’ என மூன்று பிரிவுகளை உடையது. இவையே ‘முத்தமிழ்’ என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்.

தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

  1. எழுத்து

  2. சொல்

  3. பொருள்

  4. யாப்பு

  5. அணி

அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று வகை இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர் (விக்கிப்பீடியா).

தெலுங்கு மொழியில் முதல் இலக்கணமாக (தெலுங்கு: వ్యాకరణం vyākaraṇam), ஆந்திர சப்த சிந்தாமணி (தெலுங்கு : ఆంధ్ర శబ్ద చింతామణి Āndhra śabda cintāmaṇi) சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் நன்னயா ஆவார். இவர் தெலுங்கு மொழியின் முதல் கவிஞராக (ஆதிகவி) விளங்குகின்றார். அதுமட்டுமின்றித் தெலுங்கு மொழியின் இலக்கண கர்த்தாக்களுள் முதல்வராகவும் இடம்பெறுகின்றார். இவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருக்குப் பிறகு அதர்வணாவும் அகோபலாவும் சூத்திரங்களை உருவாக்கியுள்ளனர். அவை வர்திகாஷ், பாஷ்யம் என்பன.

நன்னய்யாவிடமிருந்து கருத்துகளையும் கோட்பாடுகளையும் பெற்று 19ஆம் நூற்றாண்டில் சின்னாய சூரி, தான் எழுதிய தெலுங்கு இலக்கண நூலாகிய பாலவியாகரணத்தில் (குறிப்பு- இது குழந்தைகளுக்கான இலக்கணம்), விரிவாக விளக்கியுள்ளார்.

நன்னயாவின் கூற்றுப்படி ‘நியம’ அல்லாத மொழிகளையும் வியாகரணத்தைப் பின்பற்றாத மொழியையும் கிராமியம் (கிராமிய மொழியம்) அல்லது அபப்பிரம்சம், என அழைக்கப்படுகிறது. இவ்விலக்கணத்தில் அம்மொழிகள் இலக்கிய பயன்பாட்டிற்குத் தகுதியற்றதாக உள்ளது. தெலுங்கில் உள்ள அனைத்து இலக்கிய நூல்களும் வியாகரணத்தைப் பின்பற்றுகின்றன (விக்கிப்பீடியா).

இத்தகு மொழிகளுக்குரிய இலக்கணங்களை ஒப்பாய்வு செய்தவற்றையும் செய்யவேண்டியவற்றையும் அடையாளப்படுத்துகின்றது இப்பாடம்.

“I, Dr. Sathiyaraj Thangasamy , certify, under the penalty of perjury, that I am the original owner of all of the content used in my course(s) and, if applicable, have secured all the necessary rights to use content owned by another individual”.

Who this course is for:

  • ஆய்வுநிலை

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “தமிழ் – தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள்: செய்தன, செய்யவேண்டியன”

×

    Your Email (required)

    Report this page
    தமிழ் – தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள்: செய்தன, செய்யவேண்டியன
    தமிழ் – தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள்: செய்தன, செய்யவேண்டியன
    LiveTalent.org
    Logo